கனடாவில் இனி பல் தொடர்பான சிகிச்சை இலவசம்: யார் யாருக்கு சலுகை?

கனடாவில் முதன்முறையாக பல் சிகிச்சை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆரம்பத்தில், இந்த வாய்ப்பு மிகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும்தான் இப்போது அறிமுகப்படுத்தப் போகிறார்கள். மேலும் டிசம்பர் 1ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

$90,000க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில், 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பல் சிகிச்சைக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு $70,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பத்தில் இருந்து ஒரு குழந்தைக்கு $650 உதவித்தொகை. $70,000 முதல் $79,999 வரை சம்பாதிக்கும் குடும்பங்களின் குழந்தைகள் தலா $390 பெறுவார்கள்.

$80,000 முதல் $89,999 வரை சம்பாதிக்கும் குடும்பங்களின் குழந்தைகள் தலா $260 பெறுவார்கள். மேலும், இந்த திட்டம் அக்டோபர் 1, 2022 க்கு முன் பல் தொடர்பான செலவுகளை ஈடுசெய்யும் என்று கூறப்படுகிறது.

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் கனடாவில் 500,000 குழந்தைகள் வரை புதிய திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் இணைவதன் மூலம், சிறார்களுக்கு ஏற்கனவே கிடைத்த சலுகைகள் ரத்து செய்யப்படாது என்றும் உறுதி அளித்துள்ளனர்.

சலுகையைப் பெற பெற்றோர்கள் கனடா வருவாய் முகமை மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட குழந்தை பல் சிகிச்சை தொடர்பாக தனிப்பட்ட சலுகைகளை அனுபவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

மேலும், நீங்கள் பல் சிகிச்சைக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அதிக செலவு செய்ததற்கான ரசீதுகளையும் ஒப்படைக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்டவர்களையும் சேர்த்து இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு $90,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் அனைத்து கனேடிய குடும்பங்களும் திட்டத்தில் இருந்து பயனடைய முடியும்.