யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக அதிகாரிகள் மாணவியிடம் நாளை திங்கட்கிழமை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.இந்துக்கல்லூரியில் கல்வி கற்கும் 10ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் காயமடைந்த மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பிறந்து 50 நாட்களான பெண் குழந்தை பரிதாபமாக பலி : வெளியான காரணம்!
Next articleபாடசாலையில் வாசனை திரவியம் பாவித்ததால் பாடசாலை மாணவிகள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!