யாழ். ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரான்சில் வசிக்கும் புலம்பெயர் சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்!

யாழ். உரும்பிராயைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் சிறுமி ஒருவர் யாழில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி அனுப்பி தனது பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வானது நேற்று ஊரெழுவில் அமைந்துள்ள அக்சிலியம் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனால் அவ் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பிரான்சில் வசிக்கும் சிறுமிக்கு நன்றி சொல்லும் விதமாக அச்சிறுமியின் படத்திற்கு கேக் வெட்டி மகிழ்நதனர்.

குறித்த சிறுமி போன வருடம் இலங்கைக்கு வந்து ஆதரவற்ற குழந்தைகளை சந்தித்து சென்றுள்ளார்.

இதனால் அச்சிறுமிகளை நினைத்து மனமுடைந்த அவர் தன்னால் இயலுமான உதவிகளை செய்து வந்தார்

இந்நிலையில் நேற்றையதினம் அவரின் பிறந்தநாளுக்காக வீட்டில் பெற்றோர்கள் நிதி திரட்டி வெகு விமர்சையாக கொண்டதட இருந்துள்ளனர்.

இதனையடுத்து அதையறிந்த அச்சிறுமி எனக்கு இந்த விழா வேண்டாம் இந்த நிதியை யாழில் உள்ள அக்சிலியம் சிறுவர் இல்லத்திற்கு கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.

ஆகையால் பெற்றோர் மகளின் சொல்லிக்கிணங்க நிதியை அவ் ஆசரமத்திற்கு வழங்கியுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் அச்சிறுமியின் சொந்தகார ஆட்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.