யாழில் தாய் மகன் உட்பட மூவர் அதிரடி கைது : வௌியான காரணம்!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரேலு மேற்கு பொக்கணை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (20-11-2022) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு அருகில் வசிக்கும் தாய், மகன் மற்றும் அயலவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து 15 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous articleவயதான தாய் ஒருவரை வீதியில் இறக்கிவிட்டுச்சென்ற நபர் : பொலிஸார் தீவிர விசாரணை!
Next articleஇலங்கை ரயில் நேர அட்டவணையில் மாற்றம் : வெளியான முழு விபரம்!