க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20-11-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

O/L பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டமையினால் மேலும் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Previous articleஆற்றில் குதித்த இளம் ஜோடி-யுவதி சடலமாக மீட்பு!
Next articleபுலத்சிங்கள பொலிஸ் கூண்டிலிருந்த தனது எஜமானருக்கு பிணை வழங்க உதவிய நாய்!