புலத்சிங்கள பொலிஸ் கூண்டிலிருந்த தனது எஜமானருக்கு பிணை வழங்க உதவிய நாய்!

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது உரிமையாளரைத் நாயொன்று தேடி பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

போலீஸ் சிறை கூண்டு அருகே நாய் ஒன்று நிற்பதை பார்த்த போலீசார் அதை விரட்டினர். ஆனால், அந்த நாய் வெளியில் செல்லாமல் காவல் நிலையத்துக்குள்ளேயே ஒளிந்து கொண்டது.

இதனைக் கண்ட பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரொருவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை புளத் சிங்களப் பகுதியில் வைத்து ஜீப்பில் அழைத்து வந்த போது, ​​குறித்த நாய் ஜீப்பை ஒரு கிலோமீற்றருக்கு மேல் பின்தொடர்ந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த வளர்ப்பு நாய் இரும்புக் கம்பிகள் வழியாக எஜமானைப் பார்த்துக் கொண்டிருந்ததனைப் பொலிஸார் கண்டுள்ளனர்.

Previous articleக.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
Next articleருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக சட்டவிரோதமாக நேர்முகப்பரீட்சை நடத்திய வெளிநாட்டவர் கைது!