இலங்கையில் நத்தார் பண்டிகையில் முட்டையும் இல்லை; ‘கேக்’கும் இல்லை!

தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.

சில கடைகளில், முட்டை விலை, 55 முதல், 57 ரூபாய் வரையிலும், சில கடைகளில், 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

முட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.52ல் இருந்து ரூ.54 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த நிபந்தனைகளால் கட்டுப்பாட்டு விலையில் முட்டை வழங்க முடியாததால் முட்டை விற்பனையை நிறுத்த முட்டை விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலைமைகளால் நாட்டார் திருவிழா காலங்களில் முட்டை தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.