யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.பிராந்திய செயலகத்திற்குட்பட்ட ஜே.81 கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் யாழ் மாநகர சபையின் வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் கீழ் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கத்தை கருத்திற்கொண்டு பொது மக்களின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் இராணுவ பொலிஸ் மற்றும் யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகள், யாழ்.பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களுடன் கொட்டடி பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். ,