ஒன்றாரியோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை!

ஒன்ராறியோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு காரணமாக மாகாணத்தில் உள்ள மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், Barrie, Peterborough, Muskoka, Grey-Bruce மற்றும் Waterloo போன்ற பகுதிகளில் இன்று இரவு 50 கிலோமீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் தடைபடும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.