கனடாவில் வாடகை தொகை எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?

கனடாவில் வாடகை சுமார் $2000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரி வாடகை 12 சதவீதம் அதிகரித்துள்ளது

. Rentals.ca வெளியிட்ட தேசிய வாடகை அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட அக்டோபர் மாதத்தில் 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அக்டோபரில் வாடகை $209 அதிகரித்துள்ளது.

கனடாவின் பல பகுதிகளிலும் வாடகை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்டி உயர்வு, மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டு வாடகையும் அதிகரித்துள்ளது.

வான்கூவரில் உள்ள ஒரு படுக்கையறை வீட்டிற்கு சராசரி மாத வாடகை $2,576 மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டிற்கு சராசரி மாத வாடகை $3,521 ஆகும்.

வான்கூவர் அதிக வாடகை வருமானம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், டொராண்டோ இரண்டாவது இடத்தில் உள்ளது.