யாழில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.

34 கல்வெட்டுகள் நாளை திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு 17 மாவீரர்களின் பெற்றோரால் நிறுவப்பட்டு நவம்பர் 27ஆம் தேதி வரை வைக்கப்படும்.

யாழ்ப்பாண மாநகர சபையின் அனுமதி பெற்று தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் கல்வெட்டுகள் வைக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தலாம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous articleயாழில் ரூ.12 கோடி மோசடியில் சிக்கிய சகோதரிகள்!
Next articleஇலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!