இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இவ்வருடம் (2022) இதுவரையான காலப்பகுதியில் 12373 முறைப்பாடுகள் போலியான முகநூல் மற்றும் முகநூல் ஊடுருவல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார்.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளில் 41 வீதமும், ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகளில் 16 வீதமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூல் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாடுகளை 011-2691692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் இதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு!
Next articleயாழ். பல்கலையில் நினைவேந்தல் ஆரம்பம்!