தந்தையின் சட்டைப்பையில் இருந்த 3600 ரூபாய் மற்றும் சில ஆடைகளை எடுத்துவிட்டு வீட்டிலிருந்து தலைமறைவான 14 வயது சிறுமி!

பாடசாலைக்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற 14 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயான சிறுமியின் தந்தை அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி வீட்டில் இருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், தந்தையின் சட்டைப் பையில் இருந்து 3600 ரூபா மற்றும் சில ஆடைகளை எடுத்துச் சென்றதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணையில் அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும், அவரது மூத்த பிள்ளை வீட்டில் இருந்து காணாமல் போயிருப்பதும், களனி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் நட்பாக இருப்பதும் தெரியவந்தது.

Previous articleதிருக்கேதீச்சரத்தில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருடனை கட்டி வைத்த பொதுமக்கள்!
Next articleவவுனியாவில் சாரதி பயிற்சி வாகனம் விபத்து !