வவுனியாவில் சாரதி பயிற்சி வாகனம் விபத்து !

வவுனியா பேயாடிகூளாங்குளம் ஏ9 பிரதான வீதியில் சாரதி பயிற்சி வாகனம் ஒன்று வீதியை விட்டு அருகிலுள்ள வயல் காணிக்குல் சென்றுள்ளது. எனினும் பயிற்சியில் ஈடுபட்ட எவருக்கும் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

வவுனியா பிரதான கண்டி வீதி பேயாடிகூளாங்குளம் பகுதியில் சாரதிப் பயிற்சி வாகனம் ஒன்று வாகனப் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென்று வீதி அருகிலுள்ள வயல் தரைக்குள் நேற்று சென்று புதையுண்டுள்ளது எனினும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எவருக்கும் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

நீண்ட நேரத்தின் பின்னர் வேறு ஒரு வாகனத்தின் உதவியுடன் வயல் தரையிலிருந்து வெளியே புதையுண்ட வாகனம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் வாகனச் சாரதி பயிற்சியில் ஈடுபடும் போது பயிற்றுவிப்பாளரின் கவன குறைவாலே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

சரியான முறையில் வாகன சாரதிகளை உருவாக்க வேண்டிய வாகன சாரதி பயிற்சியாளர்கள் தவறான முறையில் வாகனங்களை செலுத்தி பயிற்றுவிக்கும் போது இவ்வாறான சாரதி பயிற்சியாளர்களால் எவ்வாறு சமூகத்தில் சரியான வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து வாகனம் செலுத்த கூடிய சாரதிகளை எவ்வாறு உருவாக்க முடியும். இவ்வாறு பொறுப்பற்று செயற்படும். வாகன சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleதந்தையின் சட்டைப்பையில் இருந்த 3600 ரூபாய் மற்றும் சில ஆடைகளை எடுத்துவிட்டு வீட்டிலிருந்து தலைமறைவான 14 வயது சிறுமி!
Next articleவவுனியாவில் 16 வயது தங்கையுடன் உடல் உறவு வைத்த அண்ணன் கைது!!