இலங்கையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

கிருஷ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்கெலியா புரான்வீக் ராணித்தோட்டத்தைச் சேர்ந்த தாயே குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்த மூன்று பெண் குழந்தைகளும் நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த தாய்க்கு பத்து மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்த அன்னைக்கு சமூக ஆர்வலர்கள் முன் வந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என தொண்டு நிறுவனங்கள் கேட்டுக்கொள்கின்றன.

Previous articleவவுனியாவில் 16 வயது தங்கையுடன் உடல் உறவு வைத்த அண்ணன் கைது!!
Next articleபுகையிரதத்தில் மோதுண்டு சிறுமி பலி !