புகையிரதத்தில் மோதுண்டு சிறுமி பலி !

ரயிலில் அடிபட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்டி அஸ்காரியா புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

16 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று (20) காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!
Next articleபெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு நிறுத்தம்!