இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 44 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இன்று 5.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அருகே ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் பல நிலைகளில் உணரப்பட்டது மற்றும் பாரிய சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டது.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜகார்த்தாவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடலில் சுமத்ராவின் தெற்குப் பகுதியில் கடந்த 18ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.