பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கனேடிய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கனேடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், வடகொரியாவின் ஆயுதச் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கனடாவுக்கு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேட்டோ படைகள் மற்றும் உக்ரைனுக்கு உதவுவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதே கனடாவின் நோக்கம் என்று அவர் கூறினார்.

நட்பு நாடுகளுடன் கனடா தொடர்ந்து பணியாற்றும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இறையாண்மை கொண்ட உக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் ஆக்கிரமிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

உக்ரைனுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.