மீண்டும் சீனாவில் அதிகரித்து வரும் கொராணா : அதிர்ச்சியில் உலக மக்கள்!

கோவிட் பாதிப்பால் சீனாவில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து சீனா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தலைநகர் பெய்ஜிங்கில் 91 வயதான பெண் மற்றும் 88 வயது முதியவர் இறந்த பிறகு, கோவிட் -19 மீண்டும் எழும் என்ற அச்சம் சீனர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொவிட் பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கிய 27 ஆயிரம் பேரில் 2365 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்தும் காலத்தை அதிகரிப்பது, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தடை செய்வது போன்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து சீன அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.