யாழிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான கஞ்சா! 2 பேர் கைது..!

வேலாங்குளம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியின் வேலங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் டிப்பர் வண்டியொன்று இடைமறித்து சோதனையிடப்பட்டதுடன் குறித்த டிப்பரிலிருந்து சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இரு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர் : வெளியான காரணம்!
Next articleபல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு : பொதுமக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!