பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு : பொதுமக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பொருட்களுக்கான விலை குறைப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் கம்பளி சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு 265 ரூபாவாகவும், கோதுமை மாவின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 43 ரூபாவினால் 255 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் சதொச அறிவித்துள்ளது.