க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு !

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 30ம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை விடைத்தாள்கள் மற்றும் நடைமுறை பரீட்சை மதிப்பீடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மே மாதம் 2021 நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous articleஇராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்களை பார்க்க வந்துள்ள இந்தியர்கள் !
Next articleயாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் !