தலைவர் பிரபாகரனின் வீடு இராணுவம் மற்றும் பொலிஸாரின் அதியுச்ச பாதுகாப்பில்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

அப்பகுதியில் ராணுவம், போலீசார், உளவுப் பிரிவினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, வல்வெட்டித்துறை தீருவில் பிரதேசத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்தை சுத்தம் செய்வதற்கு இராணுவம் தடை விதித்துள்ளது.

இராணுவத்தினரின் தடைகளை மீறி துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, ​​துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 27ஆம் திகதி தாயகம் எங்கும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமையோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கபட்ட நடிகை சமந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
Next articleகிளிநொச்சியில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான ஆசிரியை! லண்டன் குடும்பஸ்தரிடம் குழந்தைதை பராமரிக்க பணம் கேட்டு புகாரழித்த குடும்பஸ்தர்!