கனடா ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் கூறினார்.

எவ்வாறாயினும், தொழிற்சங்கத்திற்கும் ஒன்ராறியோ அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கனடிய பொது ஊழியர் சங்கம் (CUPE) மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் வார இறுதியில் தொடர்ந்த பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

CUPE உறுப்பினர்களால் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு இரு தரப்பும் மொத்தம் 171 நாட்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதற்கான வாக்குப்பதிவு நாளை தொடங்கி வார இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleயாழில் தோட்டம் செய்யும் பிரதேச செயலக அரச ஊழியர்கள் – குவியும் பாராட்டுக்கள்
Next articleகனடாவில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு ஏற்பட்ட துயரம்: ஆபத்தான நிலையில் ஒருவர்