கனடாவில் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்ற திட்டம்!

2025ஆம் ஆண்டுக்குள் சுமார் ஐந்து இலட்சம் குடியேற்றவாசிகளை கனடாவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் புலம்பெயர்ந்தோரை மீள்குடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தகுதியான வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் வதிவிட அந்தஸ்து வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.’

 ஏதிலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவதனை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  2023ல் 76,000 மாணவர்களுக்கும், 2025ல் 73,000 மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

வெளிநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் குடிவரவு, குடியகல்வு மற்றும் குடிவரவு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கனடாவில் குடியேறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, விரைவில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

Previous articleகனடாவில் பட்டப்பகலில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஏற்பட்ட துயரம் !
Next articleஇந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு!