யாழில் உள்ள வீதியொன்றில் உயிரிழந்த நிலையில் கிடந்த முதலை!

யாழில் முதலை ஒன்று உயிரிழந்த கிடப்பதாக பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.அச்சுவேலி – தொண்டைமானாறு வீதியில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை (25) காலை குறித்த வீதியிலேயே உயிரிழந்துள்ளதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

இறந்த முதலையை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தொண்டைமானாறு ஏரியில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் உயிரிழப்பு! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (Video)
Next articleயாழில் பொலிஸார் நடத்திய சோதனயில் இருவர் கைது : வெளியான காரணம்!