மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கேகாலையிலுள்ள உள்ள தனது வீட்டிலிருந்து கடமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் பஸ்ஸுடன் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதான அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ்.நகரில் உள்ள உணவகங்களில் 2வது தடவையாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை!
Next articleமகளின் முன்னிலையில் இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை !