யாழில் வீதியில் போகும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்கும் போதை பொருள் பாவிக்கும் இளைஞர்கள்! : அச்சத்தில் மக்கள்!

யாழில் போதைப்பொருள் பாவித்துவிட்டு வீதியில் வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் வாழ்கின்றதாக தெரிவித்துளளனர்.

இந்த சம்பவமானது யாழ்.சங்கானை நகரினை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பாடசாலை மற்றம் கல்வி நிலையங்களுக்கு சென்று வரும் மாணவிகளை அவ் இளைஞர்கள் பாலியல் சீண்டல்கள் மற்றும் தகாத வார்த்தைகளில் பேசி வருவதால் அம்மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு தொல்லை கொடுப்பவர்கள் 18 மற்றும் 19 வயதினையுடைய சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமகளின் முன்னிலையில் இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை !
Next articleகனடாவில், 134 பயணிகளுடன் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்?