ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர் கைது!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆஸ்திரேலிய காவல்துறையால் ஐந்தரை கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில், குயின்ஸ்லாந்தில் ஒரு கடற்கரைக்கு அருகில் 24 வயது பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்திய செவிலியர் ராஜ்விந்தர் சிங், கொலை நடந்த 3-வது நாளில் மனைவி மற்றும் குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜ்விந்தர் சிங் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் ஐந்தரை கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விரைவில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleசந்தேகத்தின் பேரில் 49 பேருக்கு மரணதண்டனை விதித்த நாடு!
Next articleமுடிந்தால் ஆதாரங்களை வெளியிடுங்கள் – பிள்ளையானுக்கு சாணக்கியனின் செயலாளர் சவால்!