பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கையெழுத்திட்டு போராட்டம் ஒன்றினை நடத்திய பெண்கள்!

பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் இன்று சனிக்கிழமை (26) நீர்கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக வார இறுதி சந்தைக்கு அருகில் எதிர்ப்பு பதாகை மற்றும் துண்டு பிரசுரம் விநியோக நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த அமைப்பினர், அரசுக்கு எதிராக விழிப்புணர்வில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன், மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்னைகள், விலைவாசி உயர்வு குறித்து ஒலிபெருக்கி மூலம் விளக்கினர்.

இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் பொதுமக்களிடம் கையெழுத்தும் பெற்றனர்.

மனுவில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

Previous articleபிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Next article231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி!