வெளிவந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்றையதினம் வெளியாக 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை வருகின்ற திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சை திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவ்அறிக்கையில் ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறித்த 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.

பரீட்சையில் 5,04,245 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ். வேம்படி மாணவிகள் 64 பேர் ‘9ஏ’ சித்திகளை பெற்று சாதனை!
Next articleகனடாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!