மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிக்கு கஞ்சா கொள்வனவு செய்ய வந்த இளைஞன் நீர்வேலி – கரந்தன் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து சுமார் 100 கிராம் கஞ்சாவையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
கைது செய்யப்பட்ட இளைஞன் சாவகச்சோி பகுதியை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பின்தொடர்ந்த விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி – கரந்தன் சந்தியில் வைத்து அவரை கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.