பிறவிலேயயே கண் பார்வை இழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்தி பெற்று சாதனை!

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி ஹிமாஷா கவிந்தியா, க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவி பிறவியிலேயே பார்வையற்றவர் எனவும் அனுராதபுரத்தில் பிறந்த மாணவி சிறுவயதிலேயே எதையும் புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருந்ததாகவும் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர் .

2016ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து 173 புள்ளிகளைப் பெற்ற பின்னர், அவரது பெற்றோர் அவளை குருநாகல் மஹிந்த கல்லூரியில் சேர்த்தனர்.

உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

ஹிமாஷா காவிந்த்யாவுக்கு சித்தி கிடைத்ததை அடுத்து கருத்து தெரிவித்த மாணவியின் தாய் கீதானி
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில், என் மகள்
சாதாரண தரத்தில் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினாள், அதுமட்டுமின்றி, பள்ளியில் சங்கீதத்தையும் கற்றுக்கொண்டாள்.
அவள் பாடுவதில் வல்லவள். அவள் பல சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறாள். என மாணவியின் தாயார் கூறியுள்ளார்.