யாழில் இனி இந்த ஊருக்கு புகைரத சேவை 5 மாதங்களுக்கு மூடப்படுகிறது!

2023 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு யாழ்ப்பாணம் – மஹவை இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட சபை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்:

உங்கள் கோரிக்கைக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம். ஜனவரி 15ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மகாவையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

இந்த காலக்கட்டத்தில் சாலை முழுமையாக சீரமைக்கப்படும். இதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியும் என்றார்.

Previous articleயாழில் நிரைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பொலிஸாரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!
Next articleயாழ்.பல்கலைகழகம் – சீன விவசாய பல்கலைகழகம் இடையே ஒப்பந்தம் வேண்டாம்! மாணவர் ஒன்றியம் வேண்டுகோள், ஒப்பந்ததின் பின்னால் நாசகார திட்டம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டு..!