கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்!

ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பகுதியில் வைத்து அவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உல்லாச படகில் வந்த இருவரே இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleக.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு – 2023 முதல் நடைமுறை !
Next articleகத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தோல்வியின் எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!