எதிர்காலத்தை தேடி கனடா சென்ற இந்திய மாணவர் பரிதாப உயிரிழப்பு !

கனடாவில் நடந்த விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கனடாவின் ஒன்டாரியோ தலைநகர் டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த இந்தியர் கார்த்திக் சைனி.

20 வயதான இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு டொராண்டோவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்றபோது, ​​வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது.

இதில், சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர் பர்வீன் சைனி கூறியதாவது: ஆர்யானாவை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா சென்றுள்ளார்.

இந்நிலையில், கார்த்திக்கின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்ய கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் நம்புவதாக பர்வீன் சைனி தெரிவித்துள்ளார்.

Previous articleகத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தோல்வியின் எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!
Next articleகனேடிய டொராண்டோ ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக பரவப்பட்ட செய்தி ! பீதியில் பொதுமக்கள்!