கனடாவில் 500க்கும் மேற்பட்ட தபால் பொதிகளை களவாடிய கனேடிய அஞ்சல் ஊழியர் கைது!

500க்கும் மேற்பட்ட தபால் பொதிகளை திருடிய கனேடிய தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைன்ரைட், ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீடுகள் மற்றும் வாகனங்களில் இருந்து பொதிகளை திருடியுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட இந்த பொதிகளை அதிகாரிகள் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.

எவ்வளவு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன என்ற விவரம் வெளியாகவில்லை.

இந்த சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் இதுவரை எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு பின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.

Previous articleகனடாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடையவர் கைது !
Next articleயாழில் இரவு வேளையில் இளைஞர்கள் மீது இராணுவம் – விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்!