யாழில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய இளைஞன் ! வெளியான காரணம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புன்னாலை கட்டுவன் பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

56,000 ரூபா பெறுமதியான 1.56 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் சிறிய பொதிகளை விற்பனைக்காக தயாரித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleயாழில் கடமைக்கு செல்லமுடியாது தவித்த அரச உத்தியோகஸ்தர்கள்!
Next articleயாழில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயை பார்க்க சென்ற மகனை தாக்கிய பாதுகாப்பு உத்தியோகர்கள்!