யாழில் மீணடும் எரிபொருள் பெருவதற்காக நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களின் பின்னர் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.

இன்று முதல் சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்கு.

மேலும், அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இம்மாதம் 23 முதல் 27 வரை 229 மண்ணெண்ணெய் பவுசர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 1ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நாளாந்தம் 29 மண்ணெண்ணெய் பவுசர்கள் விநியோகிக்கப்பட்டன.

இதன்படி, புதிய திட்டத்தின் கீழ் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பவுசர்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் இது 17 வீத அதிகரிப்பாகும் எனவும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.