விபத்தில் பரிதாபமாக பலியான குடும்ப பெண் தமிழர் பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம்!

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி, கும்புறுப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். நிலாவெளி பிரதேசத்தில் உள்ள குச்சவெளி வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பௌசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, உயிரிழந்தவரின் மகள் அண்மையில் வெளியான கா.பொ.த இல் 9 A சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் மணல் கடத்தல் கும்பல் தொடர்பாக விசேட அதிரடிப்படைக்கு தகவல் வழங்கிய 19 வயது இளைஞன் மீது தாக்குல் நடத்திய மணல் கடத்தல் கும்பல்!
Next articleயாழில் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய வர்த்தகர்கள்!