யாழில் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய வர்த்தகர்கள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்வேறு வர்த்தகப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 12 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வர்த்தகர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், காலாவதியான பொருட்களை அழிக்க உத்தரவிட்டது.

யாழ்ப்பாண நகர் பகுதியில் 06 பல்பொருள் அங்காடிகளும், குருநகர் பகுதியில் 05 பல்பொருள் அங்காடிகளும், வண்ணார் பண்ணையில் உள்ள ஒரு கடையும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததாக சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலதிக நீதவான் நீதிமன்றில் உரிமையாளர்களுக்கு எதிராக கடந்த 14ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

12 கடை உரிமையாளர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கடைக்கு மொத்த அபராதமாக 305,000/= செலுத்தவும், காலாவதியான பொருட்களை அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Previous articleவிபத்தில் பரிதாபமாக பலியான குடும்ப பெண் தமிழர் பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம்!
Next articleதற்போதைய ரயில் அட்டவணை டிசம்பர் 05 முதல் கட்டமாக திருத்தம்!