பிரித்தானியாவில் குறையும் கிறிஸ்தவர்கள்; வெளியான தகவல்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் கிறிஸ்தவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

பன்முக கலாச்சார பிரிட்டனில் மதச்சார்பின்மையை நோக்கிய திசையில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் மதிப்பீட்டு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக 2011ல் 59.3 சதவீதம் பேர் தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்தினர். ஆனால் புதிய 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 46.2 சதவீதம் பேர் மட்டுமே தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் இந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின்படி, இந்தத் தரவுகள் முஸ்லீம் மக்கள்தொகையில் திடீர் அதிகரிப்பை வெளிப்படுத்துகின்றன.

ஆனால், மதம் தொடர்பான கேள்விக்கு, கிறித்தவத்திற்கு அடுத்தபடியாக, ‘மதம் இல்லை’ என்பதுதான் இரண்டாவது பதில்.

இது குறித்து கருத்து தெரிவித்த யோர்க் பேராயர் ஸ்டீபன் காட்ரெல், கிறிஸ்தவர்களின் விகிதம் குறைந்து வருவதில் பெரிய ஆச்சரியம் இல்லை.

அதே சமயம், ஐரோப்பாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் போர் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு இன்னும் ஆன்மீக வாழ்வாதாரம் தேவை என்று அவர் கூறினார்.