கனடாவில் மூதாட்டி ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பெண்ணை மற்றொரு பெண் மிக மோசமாக தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ நகரத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நடைபாதையில் நடந்து சென்ற 62 வயதுடைய பெண் ஒருவர் எதிரே வந்த பெண்ணால் கடுமையாக தாக்கப்பட்டார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த பெண்ணை தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலை நடத்திய பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் பெண்ணின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.