யாழில் காற்று மாசுபாடு அதிகரிப்பு ! சுவாச நோயாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் காற்று மாசுபாடு காணப்படுவதாக MULIPI இன் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கும்.

நாட்டில் துகள்களின் செறிவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிக அளவை எட்டியுள்ளது.

எனவே சுவாச நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous articleயாழில் சற்றுமுன் பேருந்து மீது புகையிரதம் மோதி பயங்கர விபத்து ! சம்பவ இடத்தில் பலியான பேருந்து சாரதி!
Next articleயாழ்.மாவட்டத்திலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!