15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சிங்கள ஆசிரியை கைது !

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவரை பெண் ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை கல்வி அபிவிருத்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியை மாணவனின் வீட்டிற்கு சென்று முத்தமிட்டு மேலும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், ஹொரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசிரியையே இதனை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இவர் 42 வயதான 3 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும், மாணவியின் தாயின் சகோதரியுடன் மாணவன் வளர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 5ஆம் திகதி மாணவனின் தாயார் (சித்தி) வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும், குறித்த ஆசிரியர் மாணவனை தேடி வீட்டிற்கு வந்ததாகவும், மாணவன் வீட்டில் தனியாக இருந்ததாகவும், அச்சமயம் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் இளம் தந்தை பரிதாபமாக பலி ! பிறந்து 10 நாட்களான குழந்தையின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!
Next article15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!