15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தங்கொடுவ, வென்னபுவ, மக்கும்புர உள்ளிட்ட பல பிரதேசங்களில் விஞ்ஞான பாடநெறிகளை கற்பிக்கும் 24 வயதுடைய ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பன்னல பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

வகுப்பு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் எண்ணை சந்தேக நபர் பெற்று குழந்தையை மயக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பன்னிபிட்டியவில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே பிணை வழங்குமாறும் சந்தேகநபரின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

மேலும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம், வகுப்பில் உள்ள ஏனைய மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவித்தது.

Previous article15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சிங்கள ஆசிரியை கைது !
Next articleஹட்டனைச் சேர்ந்த 10 ஆம் ஆண்டு மாணவன் பொது தராதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் (9A) சித்தி பெற்று சாதனை!