திடீரென இடம்பெற்ற பொலிஸார் சோதனையில் சிக்கிய பலர் ! வெளியான காரணம்!

அம்பாறை மாவட்டத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்ட போது 100க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பிற்பகல் வரை கல்முனை சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் போன்ற இடங்களில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அம்பரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்க தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் குழுக்களாக பிரிந்து கல்முனை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான சந்திகளிலும் பிரதான வீதிகளிலும் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்வது, அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதனுடன், சாலை விதிமுறைகள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும், கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று நீதிமன்றங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக பல வழக்குகள் நிலவும் நிலையிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.