கைவிடப்பட்ட நிலையில் வீதியோரத்தில் குழந்தை கண்டெடுப்பு!

இன்று (02) காலை பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம வீதியோரம் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்பித்திகமவில் இருந்து ஹிரிபிட்டிய வீதிக்கு செல்லும் வீதியின் ஓரத்தில் உள்ள புகொல்லாகம வெலயா என்ற இடத்தில் குழந்தை அழும் சத்தத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் சிசுவை மீட்டு பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleதிடீரென இடம்பெற்ற பொலிஸார் சோதனையில் சிக்கிய பலர் ! வெளியான காரணம்!
Next articleநுவரெலியாவில் அரசு பேருந்து விபத்து ! அதில் பயணித்தவர்களின் நிலை ?