கனடாவில் இடம்பெற்ற ரயில் விபத்து ! கொழுந்துவிட்டு எரிந்ததால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் தென்கிழக்கு சஸ்காட்சுவானில் எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தது.

வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம், மகூனுக்கு வடமேற்கே இரண்டு கி.மீ. இதனையடுத்து பிரதான வீதி 39 முற்றாக மூடப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து 2,200 மீட்டருக்குள் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தால் அவசரகால குழுக்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

39 பிரதான வீதியை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இதற்கிடையில், தடம் புரண்ட பகுதிக்கு அருகில் சில வீடுகள் அமைந்திருப்பதால், மக்கூன் பகுதியில் அவசரகாலச் சட்டம் போடப்பட்டுள்ளது. ரெஜினாவிலிருந்து தென்கிழக்கே 174 கிலோமீட்டர் தொலைவில் மக்கூன் அமைந்துள்ளது.

Previous articleயாழில் கேட்பாரற்று கிடக்கும் 2ஆம் உலகமகாயுத்த காலத்துக்கு உரிய கட்டுமாணம் !
Next articleடெஸ்லா நிறுவனத்தின் ஓனர் எலான் மஸ்க் வெளியிட்ட புதிய வாகனம் ! அதிர்ந்து போன உலக மக்கள் !