காரினுள் மாட்டிக்கொண்ட 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பலி!

பிலியந்தலை – ஜயமாவத்தி பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சிக்கி உயிரிழந்துள்ளார்.

காரின் கதவுகள் திறக்கப்படாததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காரில் சிக்கிய மாணவனின் வாயில் இருந்து சளி வெளியேறி வியர்த்து கொட்டியதாகவும், உடல் சூடாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleகுவைத்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப்பெண்; வைரலாகும் புகைப்படம் !
Next articleகாட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்ற வயோதிபரொருவர் சடலமாக மீட்பு!